நற்றிணையில் உழவர்களின் அன்றாட வாழ்வியல்
DOI:
https://doi.org/10.21839/lsdjmr.2024.v3.162Keywords:
உழவர்கள், வேளாளர், உழவுத்தொழில், வெறியாடல், கழைக்கூத்து, நெல், விதைகள், சுனை, விருந்தோம்பல்Abstract
காலம் பல மாறினாலும் கண்டம் பல அழிந்தாலும் அழியாத சிறப்புடையது நம் தாய் மொழியாகும். அத்தகைய சிறப்புடைய மொழியில் இடம் பெற்றுள்ள எட்டுத் தொகை நூல்களுள் முதலாவதாக அமைந்துள்ளது. நற்றிணை ஆகும். இவை நல் என்னும் அடைமொழியை பெற்றுள்ளது. இந்நூல் வாயிலாக அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறிய உதவும் கண்ணாடியாகவும் உள்ளது என்றால் மிகையாகாது. இந்நூலில் அகவாழ்வு சார்ந்த செய்திகள் மட்டுமல்லாது அக்கால மக்களின் உழவு முறைகள் மற்றும் உழவர்களுடைய வாழ்வியலையும் சிறப்பான முறையில் எடுத்துரைக்கின்றது. இன்றைய உலகிற்கு தேவையானதும் மக்களின் உயர்நாடியாகவும் உள்ள உழவர்களையும் உழவுத் தொழிலையும் சிறப்பிக்கவும் இன்றைய உழவர்களுக்கு சங்க கால இலக்கியமான நற்றிணையில் காணலாகும் செய்திகள் முன்மாதிரியாக விளங்கின என்பது புலனாகின்றது.

.