வையைப் பாடல்களில் மகளிர்
DOI:
https://doi.org/10.21839/lsdjmr.2024.v3.137Abstract
சங்க இலக்கியங்களில் பாடலால் பெயர்பெற்ற நூல்கள் இரண்டு. ஒன்று கலித்தொகை. மற்றொன்று பரிபாடல். அகத்திணைச் செய்யுள்களுக்குப் பாடல் வகைகளாகக் கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். எல்லாச் சங்க இலக்கியங்களும் பலரால் பாடப்பட்டு தொகுக்கப்பட்ட நூல் தான். பரிபாடலும் பலரால் பாடப்பட்டு தொகுக்கப்பட்ட நூல். இதைப் பரிபாட்டு என்றும் கூறுவர்.
வையைத் தலைவியர்கள் கற்புக் காலத்தில் பிறர் காணக்கூடியவாறு தமது தலைவரோடு நீராடுகின்றனர். தலைவனோடு ஊடல் கொள்கின்றனர். தலைவனை ஊடலில் வையை ஆற்றில் தாக்குகின்றனர். இவை தவிர தலைவியின் தோழியர் தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தைப் பழித்துரைக்கின்றனர். தலைவி பரத்தையோடு நேடியாக வாய்த்தர்க்கம் புரிகின்றாள். தலைவன், தலைவி, தோழியர், கண்டோர் போன்றோரின் பல்வேறு கூற்றுகளும் செயற்பாடுகளும் வையைப் பாடல்களில் வருகின்றன. இவற்றை விவரிக்கும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது.

.